முதலடியின் இறுதியில் அளபெடையாக வந்த சீர் அடுத்த அடிமுதலில்அந்தாதித்து வருவது. (யா.க. 52 உரை.)எ-டு : ‘மேஎய ஒற்றினை விழைவினன் கூஉய்க்கூஉ யதும் வந்தோற் கொண்டுடன் போஒய்ப்போஒய கருமம் போற்றிநன் குரையென’ (புனையப்பட்டது)‘கூஉய்’ என்ற முதலடி ஈற்றுச்சீர் அந்தாதித்து இரண்டாமடிமுதற்சீராகி நிற்ப, அவ்வாறே இரண்டாமடி ஈற்றுச்சீரும் அந்தாதித்துமூன்றாமடி முதற்சீராகி நிற்ப, அடியளபெடைத் தொடையும் ஏற்ப வந்தமைகாண்க.