அளபெடை அசைநிலை ஆகாமையும் உரித்து (அதனையும் கூட்டிஅலகிட்டாலன்றிச் சீர்நிலை நிரம்பாது.)எ-டு : ‘கடாஅ உருவொடு’ குறள். 588 (தொ. செய். 16 இள.)அளபெடை சீர்நிலை ஆகலும் உரித்து.எ-டு : ‘தேஎந் தேரும் பூஉம் புறவில்……………………………………………………………………குராஅம் பிணைபல் விராஅங் குஞ்சி’ (தொ. 17 பேரா நச்.)