செய்யுளிசை நிறைத்தற்கு வரும் உயிரளபெடையாகிய செயற்கையளபெடைக்கண்வரும் குற்றுயிர்களின் மாத்திரை யிசை சீர்களின் அசைஉறுப்பாய் அலகுநிலை பெறுதலும் உரியது; அசைநிலையாய் அலகு பெறாமையும் உரியது.எ-டு : ‘நற்றாள் தொழாஅர் எனின்’ (குறள். 2)எருதுகா லுறாஅ திளையர் கொன்ற’ (புற.)இவை தளைநிலை பெற்றுச் செய்யுட்கண் ஓசை நிரப்ப வந்த அளபெடை ஆதலின்அலகுபெற்று அசைநிலையாகியே நிற்கும்.‘சேரமாஅஅன் வருக! நம்பீஇஇ செல்க’ (சேய்மை விளி)‘உப்போஒஒ எனவுரைத்து மீள்வாள்’ (பண்டமாற்று)‘கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும்’ (இசை)‘நாவலோஒஓ என்றிசைக்கும் நாளோதை’ (நாவலோசை)இவை அசைநிலையாகி அலகு பெறா.செய்யுட்கண் ஓசை நிரப்ப வரும் அளபெடை, சொல்லுக்கு உறுப்பாய்ப்பொருள் வேறுபாடு செய்யாமல், நெட்டெழுத் தின் விகாரமாய்க்கொள்ளப்படுவது. ஆதலின் அது பின் நிற்கும் எழுத்துக்களொடு கூடிநிரையசையாதல் இல்லை. மூன்று மாத்திரையேயன்றி நான்கு மரத்திரையாக அளபெடுப்பினும் அவை தனித்தனி நேரசையாய்க் கொள்ளப் படும். (தொ. செய். 17ச. பால.)