இயற்கையளபெடை, செயற்கையளபெடை, இன்னிசை யளபெடை, சொல்லிசையளபெடை,
நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை, எழுத்துப்பேறளபெடை என அளபெடை
எட்டு வகைப் படும்.
எ-டு : அழைத்தல், விலைகூறல், புலம்பல் – இவற்றில் எழுத்துச்
செயற்கையின்றிப் பிறந்தது இயற்கை யளபெடை. (சே
எய், நூறோ
ஒஒ நூறு, அம்மா- வோ
ஒ)
செய்யுளில் சீர்தளை கெட்டவிடத்துப் புலவன் கொள்ளுதல் செயற்கை
யளபெடை (‘நற்றாள் தொழா
அ ரெனின்’ குறள் 2)
‘கெடுப்ப
தூஉம் கெட்டார்க்குச் ….
(குறள். 15) : குற்றுகரம் அளபெடுத்த இன்னிசையளபெடை.
‘தளை
இ’ ஐகாரக்குறுக்கம் அளபெடுத்த
சொல்லிசை யளபெடை; ஆ
அ : நெடிலளபெடை; ம
ணீஇ : குற்றெழுத்து
நெட்டெழுத்தாகி அளபெடுத்த குறிலளபெடை; சின
ந்ந்து : ஒற்றளபெடை; சந்திரனை
அரா
அப் பற்றிற்று : விகாரத் தெழுந்த
எழுத்துப்பேறளபெடை. (மு. வீ.எழுத். 32)