உயிரளபெடை, தனிநிலை – முதனிலை – இடைநிலை – இறுதி நிலை – என
நால்வகைத்து.
எ-டு : ‘ஆ
அ அளிய அலவன்’ – தனிநிலை;
ஆ
அழி – முதல்நிலை; படா
அகை – இடைநிலை; ‘நல்ல படா
அ பறை’ – இறுதிநிலை (குறள்
1115)
சொல்லமைப்பினை ஒட்டி உயிரளபெடை நான்கு வகைக ளாகப்
பகுக்கப்பட்டவாறு. (தனிநிலையை முதனிலையுள் அடக்கி உயிரளபெடை மூவகைத்து
என்றலுமுண்டு). (தொ. பொ. 329 பேரா. உரை)