உயிரளபெடை எட்டு இயற்சீர்களின் பாற்பட்டு எண்வகை யாக அமையும்.
எட்டு இயற்சீர்களாவன நேர்நேர் – நிரைநேர் – நேர்நிரை – நிரைநிரை –
நேர்நேர்பு – நேர்நிரைபு – நிரைநேர்பு – நிரைநிரைபு என்பன.
எ-டு : ஆ, அ – நேர் நேர்; ஆ, அங்கு – நேர்நேர்பு; கடா, அ – நிரை
நேர்; ஆ, அவது – நேர் நிரைபு; ஆ, அழி – நேர் நிரை; புகா, அர்த்து –
நிரைநேர்பு; படா, அகை – நிரை நிரை; விரா, அயது – நிரைநிரைபு
இவ்வாறு எண்வகையாக உயிரளபெடைகளைச் சீர்நிலையை யொட்டிக் கொள்வர்.
(தொ. எ. 41 நச். உரை; தொ. பொ. 329 பேரா. உரை)