அளபெடைப் பெயர்கள் இயல்பாகவே வினியேற்கும். தொழீஇ – அழாஅன் -மகாஅர் – மாஅல் – கோஒள் – என்னும் இகர னகர ரகர லகர ளகர ஈற்று அளபெடைப்பெயர்கள் இயல்பாக விளியேற்கும். பெயர்நிலையும் விளிநிலையும் ஒன்றேயாய்நிற்கும் என்பது. (தொ. சொ. 122, 132, 138, 146 இள. உரை)