அளபெடைத் தொடை

அளபெடை சீர்களில் ஒன்றி வருவது அளபெடைத் தொடையாம். அடிதோறும்முதற்சீர்களில் அளபெடுத்து ஒன்றுவது அடி அளபெடை. ஓரடியிலே சீர்களில்அளபெடுத்து ஒன்றுவது சீர்அளபெடைத்தொடையாம். அதன் விகற்பங்கள்பலவாம்.எ-டு : ‘ ஓஒ தல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅ தும் என்னு மவர்’ (குறள். 653)இஃது அடி அளபெடைத்தொடை.‘ மாஅ த் தாஅ ள் மோஒ ட்(டு) எருமை’சீர் அளபெடைத் தொடை. (யா. க. 41 உரை)