அளபெடைச்சீர்

நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் அளபெடையானது நெடிலும்இனக்குறிலும் சேர்ந்து மூன்று மாத்திரை அளவிற்றாகிய ஈரெழுத்து எனக்கொண்டனர். சொல்லாந் தன்மை எய்தி நின்ற அளபெடை இரண்டாகப் பகுக்கப்பட்டுஇயற்சீர் ஆகும்.ஈரசைச் சீர்களுள் இயற்சீர் 10; உரிச்சீர் 6, இப்பதினாறனுள்உரிச்சீர் ஆறும், நேர்புநேர் நிரைபுநேர் ஆகிய இயற்சீர் இரண்டும்அளபெடைச் சீர் ஆகா. ஆகவே அளபெடைகள் நேர் நேர் – நிரை நேர் – நேர் நிரை- நிரை நிரை – நேர் நேர்பு – நிரை நேர்பு – நேர் நிரைபு – நிரை நிரைபுஎன்னும் எட்டு இயற்சீர்களாகவே அமைதல் கூடும்.ஆஅ – நேர் நேர் – ஆஅங்கு – நேர் நேர்புகடாஅ – நிரை நேர் – ஆஅவது – நேர் நிரைபுஆஅழி – நேர் நிரை – புகாஅர்த்து – நிரை நேர்புபடாஅகை – நிரை நிரை – பராஅயது – நிரை நிரைபுஇவ்விதி கட்டளை யடிக்கே உரியது. (தொ. செய். 17 நச்.)