அளபெடுக்கும் ஆன்ஈற்றுப் பெயர் ஆ‘ஓ’ ஆகாமை

அழாஅன் கிழாஅன் – என்னும் அளபெடைப்பெயர்கள் அளபெடுத்தால் ஆகாரம்ஓகாரம் ஆகா. (தொ. சொ. 197 நச். உரை)“உழாஅன் கிழாஅன் என்பனவோ எனின், அவை அன்ஈற்றுப் பெயர்கள் (உழவன்கிழவன்) ஒருமொழிப் புணர்ச்சியான் அவ்வாறு நின்றன. அவை ஆன் ஈறாயவழி,உழவோன் கிழவோன் – எனத் திரியுமாறு அறிக.” (தொ. சொ. 195 சேனா. உரை)உழவன் கிழவன் என்னும் அன்ஈற்றுப் பெயர்களே உழவோன் கிழவோன் – எனத்திரிந்துள. உழவான் கிழவான் – என ஆன் ஈற்றுச் சொற்களே இல்லை. ஆதலின்சிறுபான்மை அன்ஈறும் ஓன்ஈறு ஆகும் என்பது அறிக. (நச்.)