உயிர்க்குறிலும் உயிர்மெய்க்குறிலும் ஒரு மாத்திரை அளவின.
உயிர்நெடிலும் உயிர்மெய் நெடிலும் இரண்டு மாத்திரை அளவின. இவை தமக்கு
ஓதப்பட்ட ஓசையளவினைக் கடந்தொலித்தல் அளபிறந்து உயிர்த்தலாம். (தொ. எ.
33 நச்.)
(இசைநூலிடத்து, உயிர் 12 மாத்திரை யளவும் மெய் 11 மாத்திரை யளவும்
நீண்டொலித்தலுமுண்டு என்ப.) (நன். 100 மயிலை.)