‘அளபு இறந்து இசைத்தலும்’: இச்சூத்திரத்தின் நோக்கும் பயனும்

இயற்றமிழ்ச் செய்யுளுள், உயிரெழுத்துக்கள் நான்கு மாத்திரையினும்
கடந்து இசைத்தலும், ஒற்றெழுத்துக்கள் அளபெடையைக் கடந்து இசைத்தலும்
உள. அவை ஏழிசை யொடும் பொருந்திய நரம்பினையுடைய யாழ் நூலிடத்தன வாம்
என்ப – என்னும் இச்சூத்திரத்தால், பாக்களை ஓசை நயம்படக்
கூறுதற்கண்ணும், கொச்சகக் கலி- பரிபாடல் – பண்ணத்தி – ஆகியவற்றைப்
பண்ணோடு ஒப்பக் கூறுதற் கண்ணும், உயிரும் ஒற்றும் மாத்திரையளவு
நீண்டிசைக்கு மிடத்து, அவற்றிற்கு இயற்றமிழ் இலக்கணத்துள் விதி
யின்மையின், அவற்றை இசைத்தமிழ் இலக்கண முறையான் அமைத்துக் கொள்ளல்
வேண்டும் என்பது இச்சூத்திரத்தின் நோக்கும் பயனும் ஆம். (தொ.எ.33
ச.பால.)