உண்பல் தின்பல் – என எதிர்காலம் பற்றி வரும் தன்மை யொருமைவினைமுற்று, இதுபோது, அதனை உண்பன் – தின்பன் – என அன்ஈறாக வழங்கும்என்ப. (தொ. சொ. 200 இள. உரை)கூறுவன் என்று தனித்தன்மை சொன்னாரும் உளராலோ எனின், இக்காலத்துஅல்ஈற்று வினை அன்ஈறாய் நடக்கவும் பெறும்; என்னை? ‘அல்வினை‘அன்’னாய்த் திரியவும் பெறுமே’ என்றாராதலின்.எ-டு : ‘(பந்தம் அடிதொடை பாவினம்) கூறுவன்’ – என்றார் அமிதசாகரர். (நேமி. வினை. 2 உரை.)(அல்ஈற்று வினை எதிர்காலத்தில் மாத்திரமே வரும்; அன் ஈற்று வினைமுக்காலத்தினும் வரும். ஆதலின் அதனை அல்ஈற்றின் திரிபு என்றல்ஏலாது.)