வினைச்சொல்லைச் சார்ந்த முதற்பெயராகி விரிக்குமிடத்து வேற்றுமை
யுருபு பெறாது நிற்கும் பெயரே அல்வழிப் பொருட் பெயர். (எ-டு : மரம்
பெரிது).
கல்லெடுத்தான் – கல்வீடு – கல்லியல்பு – என்பவற்றுள் உருபு
தோன்றாதாயினும் பொருளை விரித்தால் கல்லையெடுத்தான் – கல்லால் ஆகிய
வீடு – கல்லினது இயல்பு – என்று அவ்வுருபு கூட்ட வேண்டினமையால், இதிலே
கல் என்னும் சொல் வேற்றுமைப் பொருட்பெயர் எனப்படும்.
அவ்வுருபு தோன்றாமலும் கூட்டாமலும் விரித்துரைக்கப் படும் பெயர்
அல்வழிப் பொருட்பெயர் எனப்படும். (தொ. வி. 22 உரை)