அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமை அல்லாவழிப் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சியாம்.வினைத்தொகையும், பண்பு உவமை உம்மை அன்மொழி – என்னும் நான்கும்விரியவும் தொகவும் வரும் தொடர்ச்சியும், எழுவாய்த்தொடர், விளித்தொடர்,பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர்,குறிப்புமுற்றுத் தொடர், இடைச் சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் – என் னும் ஒன்பதும் ஆக, இப்பதினான்கும் அல்வழிப்புணர்ச்சிஎனப்படும். (நன். 151 மயிலை.)