எழுவாயும், விளியும், தெரிநிலைவினையும் குறிப்புவினையு மாகிய
முற்றுச்சொற்களும், பெயரெச்சமும் வினையெச்சமும் ஆகிய எச்சச்
சொற்களும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய இவை (நிலைமொழியாக
நிற்ப,) தமக்கேற்ற பெயரொ டும் வினையொடும் புணரும் புணர்ச்சியும்,
விரைவு ஆதியின் வரும் அடுக்கும், உவமைத் தொகையும், உம்மைத் தொகையும்
(என்னுமிவற்றுள் நிலைமொழி வருமொழியாகிய) தமக்கேற்ற பெயரொடும்
வினையொடும் புணரும் புணர்ச்சியும் அல்வழிப் புணர்ச்சியாம். (இ. வி.
எழுத். 54)