அல்லிக்கேணி

இன்று திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படும் தலம் இது. அல்லி மலர்கள் மிகுந்த கேணி காரணமாகப் பெயர் பெற்ற இடம். இதற்குத் திருமால் கோயில் பெருமை சேர்க்கும் நிலையில் அமைகிறது. பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ் வார் பாடல்கள் இதன் புகழை யியம்புகின்றன. இப்பதிக்குத் துளசிவனம் என்னும் பெயரும் உண்டு. திருவல்லிக்கேணி மயிலை யுள் அடங்கியிருந்த ஒரு பகுதி என்பர். இங்குள்ள கோயிலின் முன்னேயுள்ள குளம் இன்றும் அல்லி புட் கரணி என்று சுட்டப் படுவது இப்பெயர்த் தோற்றத்தைத் தெளிவாகத் தருகின்றது.
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்றால்
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணி கண்டேனேய’- நாலா – 1073 என்பது திருமங்கையாழ்வார் கூற்று.