‘அல்லது இல்’ என்பது ஒருவகை விடை பகர்தல் வாய்பாடு.இவ்வாய்பாட்டினைப் பயன்படுத்தி விடைபகர வேண்டின், வினாய பொருளையல்லதுபிறிதாய் அதற்கு இனமான பொருளைக் குறிப்பிட்டு ‘அதுவல்லது இல்லை’ எனல்வேண்டும். ‘பயறு உளவோ?’ என்று வினாவினாற்கு, ‘உழுந் தல்லது இல்லை’என்றாற் போல விடை கூறல் வேண்டும்.அல்லது என்பது அஃறிணையொருமைச் சொல்லாயினும், ‘அல்லது இல்’ என்றவாய்பாடு இருதிணை ஐம்பால் மூவிடத்தும் பொதுவாக வருதலின், யானல்லதில்லை- யாமல்லதில்லை – நீயல்லதில்லை – நீஇர்அல்லதில்லை – அவனல்லதில்லை -அவளல்லதில்லை – அவரல்லதில்லை – அதுவல்லதில்லை அவையல்லதில்லை,‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்யானல தில்லைஇவ் வுலகத் தானே’ (அக. 268)என வழக்கினும் செய்யுட்கண்ணும் வரும் ஒரு விடை மரபு வழுவமைதி இது.இது வினாயதற்கு விடைகூறும்வழிச் ‘சொல் தொகுத்து இறுத்தல்’ என்றசெப்புவகையாம். வினாயதனை மறுப்பதன்றி வினாவாத பிறிதொன்றனையும்உடன்பட்டுக் கூறுதலின் வழுவாய், வினாயதற்கு இனமாவதனைக் கூறலின்அமைக்கப்பட்டது. (தொ. சொ. 35 நச். உரை)