திருமுருகாற்று படையிலும், அகநானூற்றிலும் அலைவாய் என்ற ஊர்ப்பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. புறநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் செந்தில் என்ற பெயரால் இதே ஊரில் குறிக்கப்பெற்றுள்ளது. அலைவாய் என்பது கடற்கரையில் அமைந்த ஊரைக் குறிக்கத் தோன்றியிருக்கலாம். அலைவாய் என்ற ஊர்ப்பெயர் சரலைவாய் அல்லது திருச் சீரலைவாய் என்றும், செந்தில் என்ற ஊர்ப்பெயர் திருச்செந்தில் மற்றும் செந்தூர் அல்லது திருச்செந்தூர் என்றும் வழங்கப் பெறுகின்றன. சீர் அல்லது திரு என்ற முன் ஓட்டுடன் வழங்கப் பெறுவதும், இல் என்ம பின் ஓட்டு ஊர் என மாறி வழடீகப் பெறுவதுமே இத்தகைய வழக்கிற்குக் கரரணமாகும். இவ்வூர் நெல்லை மாவட்டத்தில் கடற்கரையில் காயல் பட்டினத்திற்குத் தெற்கில் மிக அழகரக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபன்மனோடு போராடி வெற்றி பெற்று ஜயாபிஷேகம் செய்து கொண்ட இடமாதலின் ஜயந்தி என்று. இவ்வூர் பெயர் பெற்றது என்பது புராணம், அதுவே நாளடைவில் செந்து என்று ஆகிப் பிறகு செந்தில், செந்தூர் என வழங்கியது என்பர், செயந்திபுரம் என்றும் வழங்குகின்றனர்.
“உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலை இய பண்பே” (பத்துப். திருமுருகு, 124 125)
“இருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு உற்ற சூளே” (அகம். 266/20 21)
“வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை” (புறம். 5518 19)
“சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கைவேலன்றே” (சிலப். குன்றக்குரவை, 8)