உருபு முதலியன தொகாமை. வடமொழியில் வினைச் சொற்களுக்கு உள்ள விகரணிஎழுத்துப் போலத் தமிழுக்கும் அ ஆ முதலிய சில எழுத்துக்களைக்கூறுகிறார், பி.வி. நூலார். அவ்வகையால், உண்ணுவோம் என்பது அலுக்கு.உண்டான் என்பது லுக்கு; உகரம் தொக்கு வந்தது அது. (பி.வி. 41.)இகழ்வார்ப் பொறுத்தல் ‘உயர்திணை மருங்கின் ஒழியாது(குறள் 151) வருவதற்கு (தொ. எ. 157) உரியகேளிர்ப் பிரிப்பர் (குறள் 187) ஐயுருபு தொக்கு வந்தமை விகாரம்.இது ‘லுக்கு’ எனப்படும்.புதல்வரைப் பெறுதல், மன்னரைச் சேர்ந்தொழுகல், ‘சேர்ந்தாரைக்கொல்லி’ (குறள் 306) நம்பியைக் கொணர்ந் தான் – இவை மேலை விதிப்படிஉருபு வெளிப்பட்டே நிற்றற் குரியன ‘அலுக்கு’ எனப்படும். (பி.வி..27)