அலி என்ற பெயர் கொள்ளும் வினை

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி – பேடி; பெண்மை திரிந்தபெயர்நிலைக் கிளவி – அலி. அலிக்கு ஆண்மை திரித லுண்டேனும் பெண்மைதிரிதல் பெரும்பான்மை ஆதலின், ஆண்பாலை யொட்டி ஆண்பால் வினையினைக்கொண்டு, அலி வந்தான் என முடியும். (பேடிக்குப் பெண்மை திரிதலுண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை ஆதலின் பெண்பாலை ஒட்டிப் பேடிபெண்பால் வினையினைக் கொண்டு முடியும்; பேடி வந்தாள் – எனவரும்.) பேடுபோல ‘அலி’ இருபாலையும் குறித்து வருவதாகவும் கொள்ப; அஃறிணையாகவும்கொள்ப. (நன். 264.)