அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா- என வினா அறுவகைத்தாம்.ஆசிரியன் மாணாக்கனை ‘இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது?’ என்றுவினாவுதல் அறிவினா.மாணாக்கன் ஆசிரியனை அவ்வாறு வினாவுதல் – அறியா வினா.‘குற்றியோ மகனோ அங்கே தோன்றும் உரு?’ – ஐய வினா.‘பொன்உளவோ மணியுளவோ, வணிகீர்?’ – கொளல் வினா.‘சாத்தனுக்கு ஆடை இல்லையோ?’ என்பது கொடுத்தல் வினா.‘சாத்தா உண்டாயோ?’ என்பது ஏவல் வினா. (நன். 385 சங்.)