இவ்விரு நூல்களையும் இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.இவற்றில் யாப்புப் பற்றிய செய்தியே யுள. எழுத்து முதலியஐந்திலக்கணத்துடன் புலமையிலக் கணத்தையும் கூறும் நூல் அறுவகைஇலக்கணம். இதனால் பெயர்க் காரணம் புலனாகும். இந்நூலில் 786நூற்பாக்கள் உள்ளன. பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் இத்தொகையுள் அடங்கும்.ஏழாம் இலக்கணம் அறுவகை இலக்கணத்திற்கு ஓர் அங்கமாய் அவற்றதுபுறநடையாக அமைகிறது. பாயிரமும் நூல் இறுதி வெண்பாவும் தவிர 318நூற்பாக்கள் இதன் கண்ணுள்ளன. புணர்ப்பு இயல்பு, சொன்னிலை இயல்பு,பெயர்ச்சொல் இயல்பு, விபத்தி இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல்இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு, பொருள் இயல்பு, யாப்புஇயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு என்னும் இவற்றுடன் தவஇயல்பு என்பதொன்றும் சேர 13 பிரிவுகளை யுடையது இந்நூல். புணர்ப் பியல்பும்சொன்னிலையியல்பும் பற்றியே பெரும்பாலான நூற்பாக்கள் அமைந்துள்ளன.