மொழி வருவித்துச் சொற்பொருள் முடிக்கும் வகைகளுள் ஒன்று இது.அறுவகைத் தொகைநிலைத் தொடர்களையும் விரித்துரைத்துப் பொருள்கொள்ளுதல்.எ-டு : முறிமேனி என்ற தொடரை முறி (தளிர்) போலும் என்பதனுடன்அமையாது, மாவினது தளிரின் நிறத்தையும் அதன் தட்பத்தையும் போன்றுகண்ணுக் கும் மெய்க்கும் இன்பம் தரும் மேனி – என்று வருவித் துரைத்தல்போல்வன. (இ. கொ. 89.)