அறுவகைச் செய்யுள் விகாரம்

வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத் தல்என்பன அறுவகைச் செய்யுள் விகாரங்களாம்.செய்யுட்கண் தொடைநயம் கருதி மெல்லெழுத்து அதன் இனமானவல்லெழுத்தாகத் திரிதல். (மேலும் ல், ள் என்ற இடையெழுத்துக்கள் ற், ட்எனத் திரிதலும் வலித்தல் விகாரத்துள் அடங்கும்.)எ-டு : ‘கு று த்தாட் பூதம் சுமந்தஅறக்கதி ராழியெம் அண்ணலைத் தொழினே’‘குறுந்தாள்’ எனற்பாலது ‘குறு த் தாள்’எனத் தொடை நோக்கி வலித்தது.செய்யுளில் தொடைநயம் கருதி வல்லெழுத்தை அதன் இனமாய மெல்லெழுத்தாகத்திரித்துக் கோடல் (ல், ள் – ன், ண் எனத் திரிதலும் இதன்கண்அடங்கும்.)எ-டு : ‘த ண் டையின் இனக்கிளி கடிவோள்பண்டையள் அல்லள் மானோக் கினளே’‘த ட் டை’ எனற்பாலது ‘த ண் டை’ எனத் தொடை நோக்கி மெலித்தது.செய்யுளில் தொடை நயம் கருதிக் குறில் அதன் இனமான நெடிலாகநீட்டப்படுதல்.எ-டு : ‘ஞா னீ யும் உய்கலான் என்னாதே நாயகனைக்கானீயும் என்றுரைத்த கைகேயி’ (கம்பரா 1704)‘ஞா னி யும்’ எனற்பாலது ‘ஞா னீ யும்’ எனத் தொடை நோக்கி நீட்டப்பட்டது.செய்யுளில் ஓசையும் தளையும் கருதி நெடில் இனமான குறிலாகக்குறுக்கப்படுதல்.எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்திருத்தார்நன் றென்றேன் தி யேன்’‘ தீ யேன்’ என்பது தளைகருதித் ‘ தி யேன்’ எனக் குறுக்கப் பட்டது.செய்யுளில் ஓசையும் தளையும் கருதி விரிக்கப்பட வேண்டியவேற்றுமையுருபு முதலியன தொகுக்கப்படுதல்.எ-டு : ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல்வேண்டுமாம் வேண்டார் மகன்’‘வேண்டாரை வணக்கி’ என உயர்திணைக்கண் இரண் டனுருபு விரிந்தேவரற்பாலது, செய்யுள் அமைப்புக் கருதி ‘வேண்டார் வணக்கி’ என உருபுதொகுக்கப்பட்டது.செய்யுளில் அசையை மிகுத்தல் கருதிச் சாரியை முதலியன இருசொற்களிடையே மிடைய அச்சொற்கள் விரிக்கப் படுதல்.எ-டு : ‘தண் ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்வண்ணம் கடைப்பிடியா தார்’‘தண்துறைவர்’ எனற்பாலது, சீரமைப்பு நோக்கித் ‘தண் ணந் துறைவர்’ என அம்முச் சாரியை விரிக்கப்பட்டது.யாப்பு நூல்கள் இவ்விகாரங்களை ஒழிபியலாகத் தழுவு கின்றன.