வலித்தல் மெலித்தல் விரித்தல் தொகுத்தல் நீட்டல் குறுக்கல் – என்பனஅறுவகைச் செய்யுள் விகாரங்களாம்.வலித்தல் – ‘முந்தை’ முத்தை எனத் திரிதல்‘முத்தை வ ரூஉம் காலம்தோன்றின்ஒத்த தென்ப ஏ-என் சாரியை’ (தொ. எ. 164 நச்.)மெலித்தல் – ‘தட்டை’ தண்டை எனத் திரிதல்‘தண்டையின் இனக்கிளி கடிவோள்பண்டையள் அல்லள் மானேக் கினனே.’விரித்தல் – ‘தண்துறை’ தண்ணந்துறை எனத் திரிதல்.‘தண்ணந் துறைவன் கொடுமை… நாணி’ (குறுந்9. )தொகுத்தல் – ‘இடைச்சொல்’ இடை எனப்படுதல்.‘இடை யெனப் படுப பெயரொடும் வினையொடும’ (தொ. சொ. 251)நீட்டல் – ‘விடும்’ வீடும் என உயிர்நீடல்.‘வெள்வளை நல்கான் வீடு மென் உயிரே.’குறுக்கல் – ‘தீயேன்’ தியேன் என நெட்டுவது குறுகுதல்‘திருத்தார்நன் றென்றேன் தியேன்’ (தொ. சொ. 403 நச். உரை)இவை எதுகை முதலிய தொடை நோக்கியும், சீர் அமைதி நோக் கியும்அமைவன. ‘பாசிலை ’, ‘அழுந்துபடுவிழுப்புண்’ (நற். 97) என்றாற் போல்வன இரண்டு விகாரம் வருவன.குறுந்தாள் என்பது‘குறுத்தாள் பூதம் சுமந்தஅறக்கதிர் ஆழிநம் அண்ணலைத் தொழினே’ என்புழிமெல்லெழுத்து இனவல்லெழுத்தாக வலித்தது.மழவரை என்னும் இரண்டனுருபு ‘ மழவ ரோட்டிய’ (அகநா. 1) என்புழித் தொகுத்தல். பச்சிலை என்பது ‘பாசிலை’ என நீட்டல்.உண்டார்ந்து என்பது ‘உண்டருந்து’ என நெட்டுயிர் குறுக்கல்.(தொ. சொ. 398 இள. உரை)குறுக்கை (ஐங். 266), மு த்தை – வலித்தல் (ஙகரமும் நகரமும் இனவல்லெழுத்தாகவலித்தன.)‘சுடுமண் பாவை’, ‘குன்றியலுகரத் திறுதி’ (சொ. 9) – மெலித்தல் (டகரமும் றகரமும் இனமெல்லெழுத்தாகமெலித்தன.)தண்ணந் துறைவன் – விரித்தல் (அம்முச்சாரியை இடையே விரிந்தது.)மழவரோட்டிய – தொகுத்தல் (உயர்திணைக்கண் ஒழியாது வரவேண்டும் ஐகாரம் தொக்கது)செவ்வெண்ணின் தொகை தொக்கு வருதலும் தொகுத்தலாம்.வீடுமின், பாசிலை – நீட்டல் (முறையே இகர உயிரும் அகர உயிரும் நீண்டன.)உண்டருந்து, அழுந்துபடு – குறுக்கல் (உண்டார்ந்து, ஆழ்ந்து படு – என்புழி வரும் ஆகாரம்குறுகிற்று) (தொ. சொ. 403 சேனா. உரை)இவற்றுக்கு முறையே முத்தை – தண்டை – தண்ணந்துறைவர் – வேண்டார்வணக்கி – பாசிழை – தியேன் – என உதாரணம் காட்டுவார் தெய்வச்சிலையார்.(தொ. சொ. 399 உரை)