‘அறுபொருட் பெயரும்’ : உம்மைவிளக்கம்

‘செய்வது ஆதி அறுபொரு ட் பெயரும்’ என்புழி வரும் உம்மையை ‘ஆறும் தருவது வினையே’ (320) என்னும்உம்மை போல வைத்து, அறுபொருட் பெயரில் சில குறைந்தும், இன்னதற்கு – இதுபயன் – என்னும் இருபொருட் பெயரும் பிற பெயரும் கூடியும் எஞ்ச நிற்பது- எனவும் பொருள் உரைத்துக்கொள்க. அவை வருமாறு:ஆடின கொடி, துஞ்சின கொடி – இவை செய்வது ஆதி அறுபொருட் பெயருள் சிலகுறைந்து எஞ்ச நின்றன. (முறையே செயப்படுபொருளும் அதனொடு கருவியும்குறைந்தன என்க.)உண்ட இளைப்பு எனவும், ‘குண்டு சுனை பூத்த வண்டுபடுகண்ணி’ (முருகு. 199) எனவும், குடிபோன ஊர் எனவும், பொன் பெரிய நம்பி -எனவும் பிற பெயர்கள் எஞ்சநின்றன. உண்ட இளைப்பு என்பது உண்ட காரணத்தான்வரும் காரியமாகிய இளைப்பு ஆதலால் செயப்படுபொருள் கொண்டதெனின் அமை யாதோஎனில், சாத்தன் உண்டசோறு என்புழிச் சோற்றை உண்ட சாத்தன் – எனச் சோறுஎன்பது இரண்டா முருபு ஏற்றாற்போல இளைப்பு என்பது அவ்வுருபு ஏலாமையின்,அது செயப்படுபொருள் ஆகா தென்க. இவ்வெச்சம் காரணப் பொருட்டாயேநின்றதென்க. எனவே இப் பெயரெச்சங்கள் காரணப் பொருட்டாயும் காரியப்பொருட்டாயும் என இவ்விருதிறத்த வாயும் வருதல் காண்க. (நன். 340சங்.)