நேரீற்று வஞ்சியுரிச்சீர் 12 அவை 32 வாய்பாடு பெறும்நிரையீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 36 வாய்பாடு பெறும்நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும்நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும்இந்நான்கு ஈற்று வகைகளும் முறையே 3 முதல் 7 எழுத்து வரையும், 4முதல் 8 எழுத்து வரையும், 3 முதல் 8 எழுத்து வரையும், 4 முதல் 9எழுத்து வரையும் நிகழும்.ஆசிரியப் பாவினுள் ஓரோவழி வஞ்சியுரிச்சீர் வருமாறு:எ-டு : ‘விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’ (குறுந். 210)‘மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூ’ (பதிற். 60)‘முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்’ (பதிற்.109)‘நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு ’ (சிறுபாண் 125)(தொ.செய். 21 ச. பால.)