ஓசை இடையறவுபட ஒலித்தல் என்னும் ஓசைக்குற்றம் . இதுஓசைக்குற்றம் மூன்றனுள் ஒன்று.எ-டு : வீங்குமணிவிசித்த விளங்குபுனைநெடுந்தேர் காம்புநீடுமயங்குகாட்டுள்பாம்புபெரிது வழங்குதோறோங்குவயங்குகரிமா நிரைபுநிரைபுஎன்ற இக்குறளடி வஞ்சிப்பா அடிகளில், நாலசைப் பொதுச் சீர் பலவும்வந்து தூங்கினமையின் அறுத்திசைப்பு என்னும் குற்றமாயிற்று. (யா. வி.பக். 424)