1) மூன்று மாத்திரையுடைய அறுசீரும் ஈற்றில் ஒரு நெட்டெழுத்தும்பெற்ற அறுசீரடி நான்கால் அமைவது.எ-டு : ‘மரண சோக நரக வாதை பிணிம யக்கினோடரண மான விருளெ லாம கன்ற நீரராம்கரண நான்கு புலன்க ளோடு மனது கைப்படிற்சரண டைந்து ளாரு முத்தி சார்ப திண்ணமே’ (நல்லா. பாரதம்)2) நீண்ட புளிமாச்சீர் ஆறும் ஈற்றில் ஒருநெட்டெழுத்தும் பெற்றஅறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘அதிர்பொற் கழலான் விழுதிண் கிரியா லதிசூ ரன்மான்தேர்பிதிர்பட் டிடலும் புவிமேற் படர்தல் பிழையா மெனவுன்னாஉதயக் கிரிபோற் கனகத் தியலும் ஒருதேர் மிசைநீலக்கதிருற் றெனவே கடிதிற் பாய்ந்தான் காலன் மிடறீர்ப்பான்.’(கந்தபு. இரண்டா. 57)3) குற்றுயிர் ஈற்றினுடைய ஆறு கூவிளச்சீரொடு நெட் டெழுத்து ஈற்றில்பெற்ற அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘மீட்டுமி ரும்படை மேவநெ டுங்கணை விட்டுவி யன்வழியில்மாட்டிவ ழக்கம றுத்துல கெங்கும லிந்தவு டற்குறையின்ஈட்டம றிந்துக னன்றுவி ழிப்பவெ ரிந்தவு டற்றொகுதிஓட்டறு சோரிவ றந்தது சூரனொ ருத்தனு நின்றனனே.’(தணிகைப்.)4) நான்கு மாத்திரை விளச்சீரும் மாச்சீரும் கடையில் ஒருகாய்ச்சீரும் அமையும் அறுசீரடி நான்கான் அமைவது.‘இறைவனெ ழிற்கதிர் மணிகள ழுத்திய தவிசினி ருத்தலுமேநெறுநெறெ னக்கொடு நிலவரை யிற்புக நெடியவ னப்பொழுதேமறலியெ னத்தகு நிருபனி யற்றிய விரகைம னத்துணராமுறுகுசி னத்துட னடிகள் பிலத்துற முடிக்கக னத்துறவே’எ-டு : ‘மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர்பெருமானார்நஞ்சைக் கண்டத் தடக்கும் மதுவும் நன்மைப் பொருள்போலும்வெஞ்சொற் பேசும் வேடர் மடவார் இதணம் மதுவேறிஅஞ்சொற் கிளிகள் ளாயோ வென்னும் அண்ணா மலையாரே’ (தே. I 69-2) ( I 60 -2)5) ஐந்து மாத்திரை யுடைய விளங்காய்ச்சீர் ஐந்தும் நெடி லடுத்தஈற்று விளங்கனிச் சீருமாகிய அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘வாவியொரு தேரைவடி வாளிபொழி யக்கனகன்வார்குருதி சோரவுடலின் // மேவினன்எ டுத்திரதம் விண்ணிடையு கைத்தனன்விளங்குதிற னீலனவுணன் // தாவியொரு தேர்புகவ ரக்கடிதெ ழுந்துதட மார்பிறவெருக்கிவரதன் // பாவிநில னிற்படமி தித்தனனு ருட்டுபுப ழங்கண்மிகுவித்தனனரோ’ (தணிகைப். சீபரி. 381)6) ஐந்து மாத்திரை யுடைய குறில் ஈற்று மாங்காய்ச்சீர் ஐந்தும்இறுதிச்சீராகிய ஆறு அல்லது ஏழு மாத்திரையுடைய கனிச்சீரும் சேர்ந்தஅறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : ‘எண்ணாம லேமுன்பு கடலுண்ட தேபோல வெனதூனு முண்டகொடியோன்உண்ணாடு முயிர்கொண்டு வலிகொண்டு குறிதான வுதரங்கி ழித்துவருவன்அண்ணாவில் வலனேயெ னக்கூறி யேதம்பி யரிபோல்மு ழங்கியிடலும்மண்ணாடர் புகழ்கும்ப முனிதீயர் செய்திட்ட மாயந்தெரிந்துவெகுள்வான்.’ (கந்தபு. வில்வ. பட. 30)7) ஒற்றடுத்த குறில் அல்லது நெடிலை ஈற்றினுடைய ஐந்து விளச்சீரும்இறுதி விளங்காய்ச்சீரும் கொண்ட அறுசீரடி நான்கான் அமைவது. நேரசையில்தொடங்குவது :எ-டு : ‘ஓதவார் கடலகத் துற்றவா ரமிழ்தெனா வோதினார் புலவர்மற்றுந்தீதிலாத் தீங்கனிச் சுவையெனப் பாலெனத் தேமொழிக் குவமைசொன்னார்ஏதமே புலனுறா வழிநினைப் பாலவை யின்பமே நல்கிலாவால்யாதெனக் கூறுகே னின்மொழிப் பண்பைநா னேந்திழைப்பொற்கொடிக்கே’(புலவர்மற்றுந் – இந்நாலசைச்சீர் கருவிளங்காய்ச்சீர்க்குஒப்பாம்.)நிரையசையில் தொடங்குவதுஎ-டு : ‘அரம்பையு ருப்பசி மேனகை முதலிய வரிமதர் விழிமடவார்நிரம்பிய காமந லங்கனி யவிநய நெறிமுறை கரமசையப்பரம்புமி டற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினொடும்வரம்பெறு மற்புத மின்னவிர் கொடியென மகிழ்நட மெதிர்புரிய’(காஞ்சிபு. திருநெறி. 190)8) நெடிலேனும் மெய்யேனும் இறுதியடையப் பெற்ற விளச்சீர்கள் – மூன்றுகுற்றெழுத்தாய் முடிந்த விளங்காய்ச் சீர்கள் – குறிலீற்று மாங்காய்ச்சீர்கள் – ஆகிய ஐந்து மாத் திரைச் சீர்கள் முதலைந்து சீர்களாய் நிற்க,இறுதிச்சீர் ஒன்றும் ஏழு மாத்திரை அளவுடைய மெய்யெழுத்து நடுவே மிகுந்தவிளங்காய்ச்சீரோ- மூன்று குறில் நடுவே பெற்ற விளங்கனிச்சீரோ -மாங்கனிச்சீரோ – வரும் அறுசீரடி நான்கான் அமைவது. (இலக்கணம் எடுத்துக்காட்டுள் பொருந்து மாறில்லை.)எ-டு : ‘சிலைக்குருவி றற்குருகு லக்குமர ருக்குவரு சிரமநிலைகாண்மினெனவேஅலைக்கிலைநி லாவெழுச ரிற்புதல்வ னுக்குநல் லறக்கடவுளுக்குமுறையானிலைப்படுவி லாசமணி யணிதிகழ ரங்குமிசை நிகழ்பலிகொ டுத்தரியுடன்கலைப்புரவி யூர்திருவை யுந்தொழுது புக்கனன கத்துணர்வுமிக்ககலையோன்’ (நல்லா. வாரணா. 66)(இரண்டாமடி 4, 5ஆம் சீர்கள் ‘னுக்குநல அறக்கடவு’ என இருத்தல்வேண்டும்.)9) முதற்சீர் குற்றுயிரீற்றுத் தேமா, இரண்டாவது நெடில் ஒன்றும்குறில் மூன்றும் இணைந்த கூவிளங்காய், மூன்றா வதும் நான்காவதும் குறில்ஈற்றுக் கூவிளம், ஐந்தாவது தேமா, ஆறாவது புளிமாங்காய் – என அமையும்அறுசீரடி நான்கான் அமைவது.எ-டு : தோடு டையசெவி யன்விடை யேறியொர் தூவெண் மதிசூடிக்காடு டையசுட லைப்பொடி பூசியெ னுள்ளங் கவர்கள்வன்ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்தபீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (தே I -1-1)8 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியது -எ-டு : ‘பண்ணேனு னக்கான பூசையொரு வடிவிலே பாவித்தி றைஞ்சவாங்கேபார்க்கின்ற மலரூடு நீயேயி ருத்தியப் பனிமலரெ டுக்கமனமும்நண்ணேன லாமலிரு கைதான்கு விக்கவெனி னாணுமென் னுளநிற்றிநீநான்கும்பி டும்போத ரைக்கும்பி டாதலா னான்பூசை செய்யல்முறையோவிண்ணேவி ணாதியாம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமேமேதக்க வேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தேயவ்வித்தின்முளையேகண்ணேக ருத்தேயெ னெண்ணேயெ ழுத்தேக திக்கான மோனவடிவேகருதரிய சிற்சபையி லானந்த நர்த்தமிடு கருணாக ரக்கடவுளே’(தாயுமானவர் பாடல்)இவ்யாப்பிற் சிறிது திரிந்தது ‘ஏடாயிரங் கோடி’ என்னும் அந்தகக்கவிவீரராகவர் விடுத்த சீட்டுக்கவியும் கொள்ளப் படும்.4 ஆம் வகை அறுசீர் விருத்தம் இரட்டியதுஎ-டு : காரென வாருயிர் மீதரு ளேபொழி கண்ணனை விண்ணவனைக்கந்தனை எந்தையை வந்தனை யன்பர்க டும்பகை கொன்றவனைச்சீர்சம ராபுரி யாளனை மாளுறு தேவர்ம ளாளனையோர்சின்மய ரூபனை நன்மையெ லாமுறு சேயினை யருள்புரிகஓர்வரி தாமுயிர் யாவையு நேர்வினை யொத்தும லப்பகை போய்ஒண்சுக மேவிட வைந்தொழி றந்திடு முத்தம சிற்பரமாய்ச்சேருரு வாயரு வாயிரு வகையுஞ் செறிபொரு ளாய் நிறைவாய்ச்செம்முக மைந்தொடு செம்மையி னின்றருள் செய்தச தாசிவமே! (திருப்போரூர் சந்நிதிமுறை காப்பு.2)10) நான்கு மாத்திரை மாச்சீர் ஆறுகொண்ட அறுசீரடி நான்கான்வருவது.எ-டு : ‘பிறியார் பிரிவே தென்னும் பெரியோய் தகவே யென்னும்நெறியோ அடியேம் நிலைநீ நினையா நினைவே தென்னும்வறியோர் தனமே யென்னும் தமியேன் வலியே என்னும்அறிவோ வினையோ வென்னும் அரசர்க் கரசே என்னும்’ (கம்பரா.1635)