அறிவுடை நம்பி சிந்தம்

சிந்தம் என்ற இந்நூல் அறிவுடை நம்பி என்பவரால் இயற்றப் பட்டது. இதுசெவியறிவுறூஉ என்னும் புறத்துறை பற்றியது. இது நீண்ட பாடல் வடிவிற்று;தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத்தின் அருகு தனிச்சொல்லின்றி முழுதும்இருசீரடியா யமைந்தது. இது வஞ்சிப்பாப் போன்றது எனினும், வஞ்சிப்பாஆகாது. செவியறிவுறூஉ ஆனது ஆசிரியம் வெண்பா மருட்பா என்ற பாக்களாலேயேபாடப்படல் வேண்டும் என்ற வரையறை யுண்டு ஆதலின், இதனை வஞ்சியடியால்வந்து பொருள் உறுப்பு அழிந்தமை பற்றி ‘உறுப்பழி செய்யுள்’ என்க. (யா.வி. பக். 372)