அறியாப் பொருள்வயின் செறியத்தோன்றும் வினாக்கள்

பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்புவகையான் அறியப் படாத பொருளைவினாவுதற்குரிய வினாச்சொற்கள் யாது, எவன் என்பனவாம்.எ-டு : இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருள்எவன்?இக்காலத்து எவன் என்பது என் எனவும் என்னை எனவும் மருவிற்று. யா -யாவை – யாவன் – யாவள் – யாவர் – யார் – யாண்டு – யாங்கு – என்னும்தொடக்கத்தன திணையும் பாலும் இடனும் முதலாகிய சிறப்பு வகையானும் சிறிதுஅறியப் பட்டன ஆதலின், அவை அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றாமையின்,யாது எவன் – என்ற இரண்டுமே ‘அறியாப் பொருள்வயின் செறியத் தோன்று’வனவாகக் கொள்ளப் பட்டன. (தொ. சொ. 31 சேனா. உரை)