வினாவகை மூன்றனுள் முதலாவது. ஒருபுடையானும் அறியப்படாத பொருள்வினாவப்படாமையின், பொதுவகை யான் அறிந்து சிறப்புவகையான் அறியலுறுவான்வினாவுவது அறியான் வினா. இவ்வினா வழாநிலை. “இச்சொற்குப் பொருள் யாது?”என்று பொருள் அறியாதான் அறிந்தவனை வினாவுவது அறியான்வினா. வினா,அறியலுறவினை வெளிப்படுப்பது. (தொ. சொ. 13 சேனா. உரை)