இது வினாவகை மூன்றனுள் ஒன்று. ஏனையன அறியான் வினாவும் ஐயவினாவும்.அவ்விரண்டும் வழாநிலை. அறிந்த பொருளை வினாவுதல் தக்கதன்று எனினும் ஒருகாரணம் பற்றி வினவுதலின் இது வழுவமைதியாம்.இவ்வறிபொருள் வினா, அறிவு ஒப்புக் காண்டல் – அவனறிவு தான் காண்டல்- மெய் அவற்குக் காட்டல் – என மூவகைத்து.(தொ. சொ. 13 சேனா. உரை)கற்சிறார் தம்முள் கற்ற செய்தி பற்றி வினாவி விடைகோடல் அறிவொப்புக்காண்டலாம். ஆசிரியன் மாணாக்கனை அவன் தன்மாட்டுக் கற்ற பொருள்பற்றிவினாவுதல் அவனறிவினைத் தான் உணர்ந்து கோடற்கும், அவன் பிறழ உணர்ந்தவழிஉண்மையான செய்தியை அவற்குக் காட்டற் கும் ஆதலின், இவ்வறிபொருள்வினாவின் மூவகையும் ஒருபயன் நோக்கி அமைந்தன.