அறியப்பட்ட பொருளையே வேறு அறிதலும் அறிவுறுத் தலும் முதலியபயன்நோக்கி வினாவுதல் அறிபொருள் வினா. இதன்கண் அறிவு ஒப்புக்காண்டலும், அவன் அறிவு தான் காண்டலும், மெய் அவற்குக் காட்டலும்அடங்கின. இப்பயன் கருதி அறிபொருள் வினாவும் வேண்டற்பாலதே. (தொ. சொ. 13நச். உரை)