எ-டு : இம்மரங்களுள் கருங்காலி யாது?நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?(தொ. சொ. 32 சேனா. உரை)மரங்களுள் கருங்காலியும் உள்ளது அறியப்பட்டு அஃது யாது என்றுவினாவப்பட்டது. எருது ஐந்தும் நம்முடையன என்பது அறியப்பட்டு அவற்றுள்ஒன்று காணப்பட்டிலது என்பதும் அறியப்பட்டு, அக்கெட்ட எருது பற்றிவினாவப் பட்டது.பொதுவாக வினாக்களே மிகுதியும் அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்கேவருதலின், யா யாவை யாவன் யாவள் யாவர் யார் யாண்டு யாங்கு – முதலாயினஅறிந்த பொருள்வயின் ஐயம் தீர்க்கும் வினாவாகவே உள. (தொ. சொ. 31 சேனா.உரை)