கருவியாவது வினைமுதல் தொழிற்பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது.அக்கருவி இயற்றுதற் கருவியாகிய காரகக் கருவியும், அறிதற் கருவியாகியஞாபகக் கருவியும் என இருவகைப்படும். ஞாபகமாவது அறிவிப்பது. உணர்வினான் உணர்ந்தான்; புகையினான் எரியுள்ளது என உணர்ந் தான்: இவற்றிற்குஅறிவு முதற்காரணமாம். ஆகவே, இவை அறிதற் கருவியாகிய ஞாபகக்கருவியாம்.(தொ. சொ. 74 நச். உரை)