ஆறு + ஆயிரம் > அறு + ஆயிரம் > அற் + ஆயிரம் = அறாயிரம். ஆறு என்பது நெடுமுதல் குறுகி அறு என்றாக, ஈற்று முற்றுகரம் கெடவே, அது வருமொழி ஆயிரத்தொடு புணர்ந்து அறாயிரம் என்றாயிற்று. (எ. ஆ. பக். 175).