பள்ளி என்ற பொதுக் கூறு கொண்டு முடியும் இவ்வூர்ப் பெயர் திருஞானசம்பந்தர் பாடல் வழி தெரியவருகிறது. சிவன் கோயில் கொண்ட இத்தலத்தை யுணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே என்று பாடுகின்றார் இவர். ( 175-4 ) அறம் + பள்ளி – அறப்பள்ளி ஆகியிருக்கலாம். பள்ளி என்ற பொதுக்கூறு, பொதுவாகக் குடியிருப்புப் பகுதியை யுணர்த்தும் நிலையில் அமைய, சிவன் குடிகொண்ட இடம் காரணமாக, அரன் + பள்ளி – அரன்பள்ளி ஆகி, பின்னர் அரன் பள்ளி அறப்பள்ளியாகத் திரிந்ததோ எனத் தோன்றுகிறது.