அரையம் என்ற ஊர்ப்பெயர் கபிலரால் புறநானூற்றுப் பாடலொன்றில் குறிக்கப்பெற்றுள்ளது. பாரி மகளிரை ஏற்றுக் கொள்ளாத இருங்கோவேளை நோக்கிப் பாடிய பாடல் அது. இரண்டு பகுதியான பெயரையுடையது(சிற்றரையம்,பேரரையம், 64 இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் என்றும், புகழ்ந்து பாடிய கழாஅத்தலையாரை இகழ்ந்ததனால் அழிவுற்றது என்றும் அப்பாடலில் கூறப்பெற்றுள்ள து. அரை என்ற மரப்பெயர் (Ripal) காரணமாக இவ்வூர் அரையம் எனப் யெயர் பெற்றிருக்கலாம். :
“இருபால் பெயரிய உருகெழு மூதுரா்
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும்கேள், இனி!
துந்தை தாயம் நிறைவு.ற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கமர அத்தலையை
இகழ்ந்த.தன் பயனே; இயல் தேர் அண்ணல் ” (புறம். 202:6 13)