உச்சயினுக்கும் சயந்தி நகர்க்கும் இடையேயுள்ளது அருட்ட நகர். உதயணன் மருதநிலங் கடந்து அருட்ட நகர் அடைந்தான் என்ற செய்தியுடன் தொடர்புபடுத்து அருட்ட நகர் என்ற ஊர்ப் பெயர் கூறப்பெற்றுள்ளது.
“வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
படைப்புறக் கிடங்குந் தொடைப் பெருவாயிலும்
வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
இட்டமைத்தியற்றிய கட்டளைக் காப்பின்
மட்டு மகிழ்நெஞ்சின் மள்ளர் குழீஇய
அருட்டநகரத்து……………… “ (பெருங், 1;148:176 181)