அருங்கலநூல்

அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் சார்பாக வந்த நூல்களுள்ஒன்று. இதன்கண் மறைப்பொருள் உபதேசம் காணப்படுவதாயும் அதுவல்லார்வாய்க் கேட்டு உணரத் தக்கதாயும் யாப்பருங்கல விருத்திகூறுகிறது. இந்நூல் இப்போது வழக்கில் இல்லை. (யா. வி. பக். 491)