தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலும்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திலும், தென் ஆற்காடு மாவட்டம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் வட்டங்களிலும், செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை
வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. சுவடியில், “விருத்தாசலம்
அரியலூர்” (551-5-சா) என்றிருப்பதைக் காணும்போது மேலே குறிப்பிட்ட எந்த
வட்டத்திலும் இவ்வூர் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. ‘விருத்தாசலம் அரியலூர்’ என்றிருப்பதால்
விருத்தாசலம் என்னும் ஊர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தின் பெயர்
என்பது தெளிவு. இவ்வட்டத்திற்குட்பட்ட
அரியலூர் என்பது சுவடிச் செய்தி. ஆனால்
கிராமங்களின் அகரவரிசைப் பட்டியினைக் கொண்டு பார்வையிடும் போது இவ்வூர்ப்பெயர்
விருத்தாசலம் வட்டத்தில் இல்லாது கள்ளக்குறிச்சி வட்டத்திலும் விழுப்புரம்
வட்டத்திலும் என இரண்டு வட்டங்களிலும் இடம்பெற்றுள்ளது. விருத்தாசலம் வட்டத்திலிருந்து இவ்வூர்
எப்போது இந்த இரு (கள்ளக்குறிச்சி, விழுப்புரம்) வட்டங்களில் இணைந்தது என்பதைக்
காண்போமாயின் ஓரளவிற்குச் சுவடி எழுந்த ஊரையும் காலத்தையும் நிர்ணயம் செய்யலாம்.