மணிமேகலையில் கோவலனின் முற்பிறப்பும், அவன் சாபம் பெற்றதும் ஆகிய செய்தி கூறும் நிலையில், சங்கமன் அரிபுரம் சென்று அணிகலன்களை விற்றான் என்று கூறப்பெற்றுள்ளது. இத்நிலையில் அரிபுரம் என்ற ஊர்ப்பெயர் மணிமேகலையில் கூறப்பெற்றுள்ளது. சிங்கபுரம் என்பது வசு என்பவனின் ஆட்சியில் இருந்ததாகக் கூறப்பெற்றுள்ளது. சிங்கபுரத்தைத் தான் மணிமேகலை அரிபுரம் என்றும் கூறியுள்ளதாகக் கருத இடமளிக்கிறது. (அரி என்பதும் சிங்கம் என்பதும் ஒரே பொருளுடையன) இது கலிங்க நாட்டில் இருந்ததாகவும் கூறப்பெற்றுள்ளது.
“காசில் பூம்பொழிற் கலிங்க நன்னாட்டுத்
தாயமன்னவர் வசுவுங் குமரனும்
சிங்கபுரமுஞ் செழுநீர்க் கபுலையும்
அங்காள் இன்றோர் அடற் செருவறு நாள்
மூவிருகாவத முன்னு நரின்றி.
யாவரும் வழங்கா விடத்திற் பொருள் வேட்டுப்
பல்கலன் கொண்டு பலரறியாமல்
எல்வளை யாளோ டரிபுர மெய்திப்
பண்புக் கலம் பகர் சங்கமன் தன்னை” (மணிமே. 26;15 23)