அரிசில் என்ற ஊர்ப்பெயர் இவ்வூரைச் சேர்ந்த புலவர் பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட நிலையில் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொள்ளிடத்தின் வடபாலுள்ள அரியலூர் என்ற ஊர்ப்பெயரின் மரூ௨வே அரிசில் என்ற பெயர் என்ற கருத்து உள்ளது. அரிசில் என்ற பெயரே அரியில் என்றாகி. அரியலூர் என மருவியதாகவும் கருதுகின்றனர். ஆயின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்குத் தென் கிழக்கே நாலரை மைல் தொலைவில் அரிசிலாற்றங் கரையில் அரிசிற் கரைப்புத்தூரர் என்று ஓர் ஊர் உள்ளது. இதற்கும் அரிசில் என்ற ஊர்ப் பெயர்க்கும் யாதேனும் தொடர்பு உண்டா என்ற ஆய்வு விளக்கத்தை அளிக்கலாம். நற். 141 இல் அரிசில் ஆறு பற்றி கூறப்படும் கருத்து சோழன் கிள்ளியின் ஊராக அரிசிலைக் காட்டுகிறது. அரிசில் என்பது சோழநாட்டு ஆறு என்பதும் தெரிகிறது. எனவே அரிசில் என்ற ஊர் இன்றைய அரிசிற்கரைபுத்தூராக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஊரைச் சார்ந்த அரிசில் கிழார் பாடியனவாகக் குறுந் தொகை 193 ம் பாடலும், பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்தும், புறநானூற்று 146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களும் இடைக்கின்றன.
அரிமண வாயில் உறத்தூர்.
வேள் எவ்வியின் பகைவர்களைப் பற்றிக் கூறும் சங்க இலக் கயப்பாடல் ஒன்றில் அரிமண வாயில் உறத்தூர் என்ற ஊர்ப் பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. அரிஃ கள்; உறப்பு செறிவு. கள்ளின் மணம் செறிந்த ஊர் அரிமண வாயில் உறத்தூர் என்று அமைந்திருக்கலாம்.
“ வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆஒூன்றால் பெநிதே!….. (அகம். 266:11 15)