அராகம்: மறுபெயர்கள்

அராகம் எனினும், வண்ணகம் எனினும், முடுகியல் எனினும், அடுக்கியல்எனினும் ஒக்கும். அராக அடி அளவடி முதலாக எல்லா அடியானும் வரப்பெறும்.அடி வரையாது சிறுமை நான்கடி, பெருமை எட்டடி; இடையிடை எத்துணையாயி னும்வரப்பெறும். ஒரு சாரனவற்றுள் அகவலும் வெள்ளை யும் விரவி அராகமாயும்அருகி வரப்பெறும்.(யா. க. 84 உரை)