அராகம் முடுகியல் என்னும் இரண்டும் குற்றெழுத்துக்கள் தொடர்ந்துவருதலின் நிகழுமேனும், அராகமாவது பிறிதொன்றனொடு கூட்டி அற்றுவிடாமல்தானே தனித்து அற்று நிற்பதாம். அது பரிபாடல் செய்யுள் உறுப்பு என்பர்.முடுகியல் வேறு அடிகளொடு கூடிச் செய்யுள் அமைத்தற்கு உதவுவதாய்த் தான்தனித்து நில்லாது பிற அடிகளொடு கூடிவருவதாம். ஆசிரியத் தளையொடுமுடுகிய அடி கலிஅடி ஆகும். (தொ. செய். 67 நச்.)