அரவப் பொருளில் வரும் உரிச்சொல்

கம்பலை சும்மை கலி அழுங்கல் – என்ற நான்கும் அரவம் ஆகியஇசைப்பொருண்மையினை உணர்த்தும்.வருமாறு : ‘ களிறுகவர் கம்பலை போல’ (அக. 96), ‘கலிகொள் சும்மை ஒலிகொள்ஆயம்’ (மதுரை. 263), ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபுஎடுத்த’ (அக. 11). ‘உயவுப்புணர்ந் தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) (தொ. சொ. 349 நச். உரை)