இஃது ஒரு பிரபந்தவகை. “பாவாலும் பொருளாலும் அள வாலும்பிறகாரணத்தாலும் பிரபந்தங்கள் வேறுபடப் பெயர் பெறுவன உள” என்னும்இச்சூத்திரத்துள், பிற காரணத்தால் பெயர் பெறும் நூல்களுள் ஒன்றாக‘அரசன் விருத்தம்’ இடம் பெறுகிறது. (தொ. வி. 283 உரை)அரசனைச் சார்ந்துவரும் இலக்கியங்களில் அரசன் விருத்த மும் ஒன்று:மலை, நீர், நாடு, நிலம் ஆகியவற்றின் வருணனை களும், அரசனுடையதோள்மங்கலம், வாள்மங்கலம் ஆகியனவும், பத்துக் கலித்துறையும் முப்பதுவிருத்தமும் கலித்தாழிசையுமாகிய யாப்பினால் பாடி முடிப்பதொருபிரபந்தம். இது முடிபுனைந்த வேந்தர்க்கு ஆம். (நவ. பாட். மிகைச்செய்யுள்கள் – 1 சது. 5)