கி.பி. 1868 முதல் 1911 வரை 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தபெரும்புலவர்; தந்தையார் அரசுப்பிள்ளையாதலின், அரசஞ் சண்முகன் என்றுதந்தையது பெயருடன் தமது இயற் பெயரையும் கொண்டார்; தமிழ் இலக்கணஇலக்கியங்களில் துறை போயவர்; வடமொழிப் புலமையும் உடையவர்; நுண்மாண்நுழைபுலம் மிக்கவர்; பண்டைய உரையாசிரியர் களிடம் பெருமதிப்புக்கொண்டவர்; நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்.கவிதைபாடும் சிறப்பும் அவர்பாலுண்டு. இவர் இயற்றியனவாகக் கூறப்படும்நூல்கள் முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசை இருநூறு, பஞ்ச தந்திரவெண்பா, மதுரைச் சிலேடை வெண்பா, மதுரை மீனாட்சி யம்மை சந்தத்திருவடிமாலை, திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி,தொல்காப்பியப் பாயிரம் சண்முக விருத்தி, ஆகுபெயர் அன்மொழித் தொகைஆராய்ச்சி என்பன. இவற்றுள் இன்று திருக்குறள் சண்முக விருத்திகாணப்பட்டிலது. இவரெழுதிய வேறுசில நூல் களும் இதுபோது கிட்டில.திருக்குறளும் தொல்காப்பிய முமே இவரது புலமைக்கு இருகண்கள் எனலாம்.தொல் காப்பியச் சண்முக விருத்தியை நல்வினையின்மையால் தமிழ்நாடுஇழந்துவிட்டது.